பாகூர்: வள்ளுவர்மேடு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், 106ம் ஆண்டு காவடி பூஜை விழா, வரும் 23ம் தேதி நடக்கிறது. பாகூர் அடுத்துள்ள வள்ளுவர்மேட்டில் தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 106ம் ஆண்டு பங்குனி உத்திர காவடி பூஜை விழா, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.வரும் 22ம் தேதி காலை 8.00 மணிக்கு 108 சங்காபிஷேகம், அதனை தொடர்ந்து, இரவு 7.00 மணிக்கு, வள்ளி தெய்வானை சமே திருமுருக சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்வான காவடி பூஜை வரும் 23ம் தேதி 2.30 மணிக்கு நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் காவடி துாக்கியும், செடல் போட்டும் நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். விழா நாட்களில் சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொது மக்கள் செய் துள்ளனர்.