தர்மபுரி: நல்லம்பள்ளி அடுத்த சிவாடியில், கொடகாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை தீர்த்தகுடம், முளைப்பாரி அழைத்தல் நடந்தது. இரவு, 7 மணிக்கு முதல் காலயாக பூஜை, மங்கள ஆர்த்தி நடந்தது. நேற்று காலை, 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தனம் நிகழ்ச்சி நடந்தது. 10 மணிக்கு கொடகார அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.