பதிவு செய்த நாள்
19
மார்
2016
02:03
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த எர்ரகெட்டு கிராமத்தில், வீரபத்திர சுவாமி கோவில் திருவிழாவில், பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த எர்ரகெட்டு கிராமத்தில், குரும்பர் இன மக்கள் சார்பில், மூன்றாம் ஆண்டு வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேக நிறைவு விழா நடந்தது. நேற்று முன்தினம் காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, வீரபத்திர சுவாமி கரகம் எடுத்து ஆடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மழை
வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நோய்நொடியின்றி வாழவும், விரதம் இருந்த பக்தர்கள், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.