கடலுார் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2016 12:03
கடலுார்: கடலுாரில் குருத்தோலை ஞாயிற்றையொட்டி கிறிஸ்தவர்கள் ஊர்வலம் சென்றனர். குருத்தோலை ஞாயிற்றையொட்டி கடலுார் பீச்÷ ராட்டில் உள்ள குரு மடத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் நேற்று குருத்தோலை ஏந்தியபடி ஊர்வலமாக புனித கார்மேல் அன்னை ஆலயத்திற்கு வந் தடைந்தனர். தொடர்ந்து அங்கு கூட்டுத் திருப்பலி நடந்தது. இதில், கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர். விருத்தாசலம்: துாய பாத்திமா அன்னை ஆலய பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில், ஏராளமான கிறிஸ்துவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பஸ் நிலையத்திலி ருந்து புனித பாத்திமா அன்னை ஆலயம் வரை ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது. அதே போல், பெண்ணாடம் வடக்கு ரதவீதியில் உள்ள துாய அன்னை ஆலயத்திலிருந்து ஏராளமான கிறிஸ்துவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். கூட்டு பி ரார்த்தனை, திருப்பலி நடந்தது.