Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீட்டில் இருந்தே வழிபட்டால் ... காத்திருக்கும் தண்டனை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எல்லாரிடமும் மரியாதை வையுங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2016
02:03

மனிதர்களை அல்லாஹ் கண்ணியமான படைப்பாகவே படைத்து சகல வசதிகளையும் அளித்திருக்கிறான். அதுபோலவே மனிதர்கள் தங்களுக்குள் கண்ணியம் பாராட்டுதலையே அல்லாஹ்வும், நம் பெருமானார்(ஸல்) அவர்களும் விரும்புகிறார்கள். குர்ஆனிலே... நிச்சயமாக நாம் ஆதமுடைய சந்ததியினரைக் கண்ணியப்படுத்தினோம். இன்னும் கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து அவர்களுக்காக நல்ல உணவும் பொருட்களும் அளித்து நாம் படைத்துள்ள படைப்புகள் பலவற்றையும் விட அவர்களைத் தகுதியில் மேன்மைப்படுத்தினோம் என அல்லாஹ் கூறுகிறான். இதே குர்ஆனில்...இறைவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான் என்றும், உங்கள் நலனுக்காக இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளான் என்றும் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ் தொடர்ந்து, நாம் பூமியில் உங்களை அனைத்து அதிகாரங்களுடன் வாழச் செய்கிறோம். மேலும் அங்கே உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் அமைத்து தந்தோம், என்கிறான். இப்படி மனிதப் படைப்பையே சிறப்பாக படைத்து இந்த உலகிற்கு அனுப்பி வைத்துள்ளான். அல்லாஹ் இந்த மானுடப் படைப்பிற்கு தருகிற அதே மரியாதையை சக மனிதர்கள் மீதும் நாம் செலுத்த வேண்டும் என்பதில் இஸ்லாம் கண்டிப்பு காட்டுகிறது. யார் இனவாதத்தைத் தூண்டி விடுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்லர் என்பதும், எவர் இனத்தின் பெயரால் சண்டையிடுகிறாரோ அவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர் என்பதும் நபிமொழி. லகும் தீனுக்கும் வலியதீன்.... அதாவது உன் மதம் உன்னோடு அவர்களின் மதம் அவர்களோடு என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் இஸ்லாம் மனிதர்களுக்குள் ஒற்றுமை உணர்வை பேணிக் காக்க வலியுறுத்துகிறது. நபிகள் நாயகம் ஒருமுறை...பூண்டு வெங்காயத்தைச் சாப்பிட்டு விட்டு பள்ளிவாசலுக்குள் நுழையாதீர்கள் என்று கட்டளையிட்டார். மருத்துவ குணம் கொண்ட பூண்டு, வெங்காயத்தின் மணம் தொழுகைக்கு வருவோருக்கு மன சஞ்சலத்தை ஏற்படுத்தலாம் என்பதற்காகவே இப்படி வேண்டுகோள் வைத்தார். சுவாசம் கூட பிறருக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதில் அவர் உறுதியுடன் இருந்தார். பிறரின் மன உணர்வை இஸ்லாம் எந்த அளவு மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இதைப் போல, இறந்து போன மனிதர்களைப் பற்றிய நல்ல விஷயங்களை மட்டும் பேசுங்கள். அவரைப் பற்றிய தீயவற்றைப் பேசாதீர்கள், என்பதும் நபி மொழி. இறப்பிற்கு பிறகும் மனிதர்களை மதிக்கும் மார்க்கம் இஸ்லாம். மனிதர்களுக்குள் அன்பு பாராட்டுவதையும், கண்ணியம் காப்பதையும், திருமறையின் பக்கங்கள் தோறும் அல்லாஹ் வலியுறுத்திக் கொண்டே செல்கிறான்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar