திருப்பரங்குன்றம் மலைக்கு திருப்பரங்கிரி, சுமந்த வனம், பராசல தலம், குமார பரி விட்டணு துருவம், கந்தமாதனம், கந்தமலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், சுவாமிநாதபுரம், முதல்படை வீடு என்று பல பெயர்கள் உண்டு. மலையின் வடக்குப்பகுதி கைலாயம் போலவும், கிழக்கு பெரும் பாறையாகவும், தெற்கில் பெரிய யானை படுத்திருப்பது போலவும், மேற்கில் சிவலிங்கம் போலவும் காட்சியளிக்கிறது.