காஞ்சிபுரம் : அச்சிறுபாக்கம் அடுத்த, நடுபழனி மரகத தண்டாயுதபாணி சுவாமி கோவில் படி திருவிழா மற்றும் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. நடுபழனி மரகத தண்டாயுதபாணி சுவாமி கோவில், 30ம் ஆண்டு படி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை, 8:30 மணிக்கு தேர் திருவிழா நடைபெற்றது. மலையை சுற்றி, தேர் 10:30 மணிக்கு நிலைக்கு வந்தது. அதனை தொடர்ந்து பஜனை குழுவினர்கள் கனக மலையை சுற்றி வந்து படியேறுதல் நிகழ்சி நடைபெற்றது; பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.இன்று காலை, 9:30 மணிக்கு பக்தர்கள் காவடி எடுத்து கிரிவலம் வருதல் நிகழ்ச்சியும், பின், அபிஷேகம், ஆராதனை நடைபெறும். இரவு, 11:00 மணிக்கு முருகன் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். 12:00 மணியளவில் மலர் அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.