தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அரோ கர கோஷத்துடன் பங்குனி உத்திர விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2016 06:03
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அரோ கர கோஷத்துடன் பங்குனி உத்திர விழா நடந்தது. விழாவில் பக்தர்கள் கொடுமுடி தீர்த்த கலசம், பால், பன்னீர், இளநீர் காவடி எடுத்து மலைக்கோயிலை வந்தடைந்தனர்.
பக்தர் ஒருவர் 13 அடி வேல் குத்தி நேர்த்திக் கடன் செலுத்துல், பறவைக்காவடி மலைக்கோயிலில் வலம் வருதல் ஆகியன நடந்தன. சுவாமிக்கு கொடுமுடி, சுருளி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தங்கள் அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த நிலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மலைக்கோயிலில் உற்சவருடன் தேரோட்டம் நடந்த நிலையில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, கானல்காடு, பட்லங்காடு, கே.சி.பட்டி, காமனுõர் உள்ளிட்ட கீழ்மலைப் பகுதியினர் கலந்து கொண்டனர். வெளியூர் பக்தர்கள் கூறுகையில்:, தற்போது நடந்து வரும் ஆங்கிலப் புத்தாண்டில் தாண்டிக்குடி பாலமுருகனை தரிசனம் செய்வதன் மூலம் சகல தோஷ நிவர்த்தி பெற்று வளமுடன் வாழ வழி ஏற்படும் என்ற நோக்கில் இங்கு வந்துள்ளதாக தெரிவித்தனர்.