அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2016 11:03
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடந்த திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோயில் பங்குனி திருக்கல்யாண உற்சவம் மார்ச் 20ல் துவங்கியது. தினமும் மாலையில் பல்லக்கில் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.முக்கிய விழாவான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. காலையில் ஸ்ரீதேவி, பூமா தேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகியோருடன் சர்வ அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.காலை 10.45 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், கோ பூஜையும் நடந்தது. பின் சுவாமிகளின் திருக்கல்யாண பட்டாடை, சீர்வரிசை பொருட்கள் கோயிலை சுற்றி எடுத்து வந்தனர். காலை 11.40 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.சோலைமலை முருகன் கோயில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோயில் விசேஷ பூஜை நடந்தது. 18ம் படி கருப்பண சுவாமி சன்னதியில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். காலை 11.00 மணிக்கு உற்சவர் முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு வைர கிரீடம், வைர வேல் அணிவிக்கப்பட்டது.