பதிவு செய்த நாள்
24
மார்
2016
11:03
அவிநாசி : "ஓம் சக்தி கோஷங்களுக்கு மத்தியில், கருவலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது.அவிநாசி அருகே கருவலூரில், பல நூறு ஆண்டு பழமையான, மாரியம்மன் கோவில் உள்ளது. பங்குனி தேர்த்திருவிழா, 19ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிம்ம வாகனம், பூத வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது.நேற்று காலை, 6:00 மணிக்கு, வேல், சூலம், உடுக்கை, கமண்டலம் ஏந்தி, ராஜ அலங்காரத்தில், கையில் வளையல் மாலை ஏந்தி, அம்மன் திருத்தேருக்கு, சூலத்தேவருடன் எழுந்தருளினார். மாலை, 3:00 மணியளவில், விநாயகர் தேர் வீதியுலா நடைபெற்றது. 5:00 மணிக்கு, தேர் வடம் பிடித்தல் துவங்கியது. பக்தர்கள் "ஓம் சக்தி என்ற கோஷத்துடன், வடம் பிடித்து இழுந்தனர்.பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடியபடி, வீதிகளில் தேர் பவனி வந்தது; முதல் நிலையில், தேர் நிறுத்தப்பட்டது. நாளை மாலை, 3:00 மணிக்கு, மீண்டும் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக் கிறது. 25ல், தேர் வடம் பிடிக்கப்பட்டு, நிலைக்கு வந்து சேருகிறது.வரும், 26ல் தெப்ப உற்சவம், காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளல், 27ல் புறப்பாடு, மஞ்சள் நீர், திருவிழா கொடி இறக்கம் நடக்கிறது. 30ல் பாலாபிஷேகத்துடன், திருவிழா நிறைவடைகிறது.