பதிவு செய்த நாள்
24
மார்
2016
12:03
மேட்டுப்பாளையம்: மிகவும் பழமை வாய்ந்த மை தானம் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடந்தது. மேட்டுப்பாளையம் - ஊட்டி மெயின் ரோடு, காந்தி மைதானத்தில் நுாறாண்டு பழமையான மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தாண்டு, 89ம் ஆண்டு குண்டம் விழா, கடந்த, 8ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கி, அம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பூச்சாட்டினார். கடந்த, 22ம் தேதி காலை, 6:00 மணிக்கு பவானி ஆற்றில், பக்தர்கள் அலகு குத்தி, அம்மனை அழைத்து வந்தனர். தொடர்ந்து, 8:20 மணி முதல் குண்டம் இறங்கும் விழா நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தல், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று அம்மன் சுவாமி திருவீதி உலாவும், 25ல் காலை பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்தலும், மதியம் அன்னதானமும், மாலையில் மஞ்சள் நீராட்டும், மகா அபிஷேகமும், 28ல் மறுபூஜையும் நடைபெறுகின்றன.