பதிவு செய்த நாள்
26
ஆக
2011
05:08
* அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணிமுதல் ஆறுமணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும்.
*கொல்லைக் கதவை சாத்திவிட்டுத் தெருக் கதவை திறந்து வைத்து விட்டுத்தான் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும்.
* எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.
* தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று சக்திகள் உள்ளன. தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது.
* விளக்கு அகிலாண்ட நாயகியின் திருவடிகள். அடிப்பாகத்தில் பிரம்மா நிலை பெற்றுள்ளார். கீழ்த்தண்டு பாகம் மஹா விஷ்ணுவின் உறைவிடம். நெய், எண்ணெய் நிறையுமிடம் சிவபெருமானின் திருமேனி திகழும் இடம்.
* ஐந்து முகங்கள் - விநாயகர், முருகர், ஸ்ரீராமர், கிருஷ்ணர், இந்திரன் ஆகியோர் அலங்கரிக்கும் இடம். தீபத்தில் துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஆகியோர் உள்ளனர்.
* தீபத்தை எந்த எந்தத் திசையில் ஏற்றினால் என்னென்ன பலன் கிடைக்கும் என்ற விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு : எல்லாவிதக் கிரக தோஷங்களும், பீடைகளும் விலகும்.
மேற்கு : கடன் தொல்லை, சனி பீடை, பங்காளிப் பகை நீங்கும்.
வடக்கு : செல்வம் சேரும் - திருமணத் தடை தீரும்.
தெற்கு : அமங்கலமும், அபசகுணமும் ஆகும். எனவே தெற்குத் திசையைப் பார்த்து விளக்கு ஏற்றி வைக்கக் கூடாது.
* நல்லெண்ணெயால் தீபமிட யம பய அகலும்.
* தேங்காய் எண்ணெய், அல்லது இலுப்பை எண்ணெயில் தீபமிட்டால் தேக ஆரோக்கியம், தனதான்ய விருத்தி உண்டாகும்.
* ஆமணக்கு எண்ணெயில் தீபம் ஏற்றினால் எல்லாவிதச் செல்வமும் பெறலாம்.