பதிவு செய்த நாள்
25
மார்
2016
12:03
அன்னுார்: அன்னுார் அருகே சித்தர்கள் வழிபட்ட கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நடந்தது. சாளையூரில், 1,000 ஆண்டுகள் பழமையான பழனியாண்டவர் மற்றும் இடும்பன் கோவில் உள்ளது. இங்கு சுயம்பு விநாயகரும் அருள்பாலிக்கிறார். இக்கோவில் பல சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது. இங்கு பங்குனி உத்திர திருவிழா, நேற்று முன் தினம் அதிகாலை, 5:40 மணிக்கு மூல மந்திர ஹோமத்துடன் துவங்கியது. காலை, 9:00 மணிக்கு பக்தர்கள் பொதுக்காவடி, தீர்த்தக்குடம் மற்றும் பால் குடங்களுடன் சாலையூர் விநாயகர் கோவிலிலிருந்து ஊர்வலமாக எடுத்து வந் தனர். கோவிலில் ஊஞ்சப்பாளையம் குழுவின் காவடியாட்டம் நடந்தது. பக்தர்கள் கோவில் சன்னதியில் காவடிகளை செலுத்தி, வழிபட்டனர். மதியம் பழனியாண்டவருக்கு பால், தயிர், தேன், பன்னீர் என பல்வேறு திரவியங்களில் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. 1,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.