பதிவு செய்த நாள்
25
மார்
2016
12:03
நங்கவள்ளி: நங்கவள்ளி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று துவங்கியது. விழாவை முன்னிட்டு, நேற்று, ஸ்ரீதேவி, பூதேவியுடன் நரசிம்மர் ஒரு தேரிலும், சோமேஸ்வரர் சவுந்தரவள்ளி மற்றொரு தேரிலும், விநாயகர் ஒரு தேரிலும், திருவீதி உலா வந்தது. இதில், அறநிலையத்துறை சேலம் மண்டல இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் சமர்மதி, செயல் அலுவலர் ரமணிகாந்தன் உள்பட, ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.