பண்ணாரி அம்மன் கோவில் உண்டியலில் 326 கிராம் தங்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2016 12:03
பண்ணாரி: பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த, 22ம் தேதி குண்டம் விழா நடந்தது. இதையொட்டி கோவிலில், 20 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டன. இவற்றை எண்ணும் பணி, கோயமுத்தூர் இந்து சமய அறநிலைத்துறை இணை இயக்குனர் ஆனந்த் தலைமையில் நடந்தது. பண்ணாரி மாரியம்மன் கோவில் துணை ஆணையர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். சத்தியமங்கலம் தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் பணமாக, 70 லட்சத்து, 26 ஆயிரத்து, 791 இருந்தது. இதில்லாமல் தங்கம், 326 கிராம், 419 கிராம் வெள்ளி இருந்தது.