Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருதுநகர் ஆலயங்களில் பெரிய வியாழன் கோயிலுக்குள் நுழைய முன்ற பெண்சமூக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று புனிதவெள்ளி: சர்ச்களில் சிலுவை பாதை வழிபாடு!
எழுத்தின் அளவு:
இன்று புனிதவெள்ளி: சர்ச்களில் சிலுவை பாதை வழிபாடு!

பதிவு செய்த நாள்

25 மார்
2016
01:03

உலகில் எந்த மனிதன் இறந்தாலும், அந்த தினம் துக்க நாளாகத்தான் நினைவு கூரப்படுகிறது. ஆனால், இயேசுவின் சிலுவை மரண  தினம் மட்டுமே, ‘குட் பிரைடே என்றும், பெரிய வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. கடவுள் தன் சாயலில் ஆதாமை படைத்தார். அவன்,  கடவுளின் கட்டளையை மீறி நடந்த போது, கீழ்படியாமை என்ற பாவம் உட்பட பல தீய செயல்களால் மரணத்தை சம்பாதித்தான். எனவே  பாவத்திலிருந்து விடுதலை பெற, அதற்கு பரிகாரம் தேட, இஸ்ரேல் மக்கள் பறவை, மிருகங்களை கொன்று அதன் ரத்தத்தை சிந்தி  கடவுளுக்கு பலி செலுத்தினர். இதனால் பாவமன்னிப்பு பெற்றதாக திருப்திப்பட்டனர். இருப்பினும், பாவத்தை விட முடியவில்லை. இந்தக்  கொடிய பாவ வழிகளில் இருந்து விடுபட கடவுள், இஸ்ரேல் மக்களுக்கு பத்து கட்டளைகளை விதித்தார். அதனையும் மக்கள்  பின்பற்றவில்லை.

பறவை, விலங்கின ரத்தத்தால் மக்களின் பாவத்தை கழுவ முடியாது, எனக்கருதிய கடவுள், மனுக்குலத்துக்காக தானே பலியாக  வேண்டுமென்று தீர்மானித்தார். எனவே ஏழையாக, கன்னிப் பெண் மரியாளின் வயிற்றில் பாலகனாக அவதரித்தார். தனது 34வது வயதில்  பாவத்திலிருந்து மக்களை விடுவிக்க தனது மாசில்லா பரிசுத்த ரத்தத்தை சிலுவையில் சிந்தினார். இயேசு தனது முப்பதாம் வயதில்  ஞானஸ்நானம் எடுத்த பின், மூன்றரை வருடங்களாக பல அற்புதங்களை மக்களுக்கு செய்தார். இதனை சகிக்காத யூத மத குருக்களும்,  ஆசாரியர்களும் இயேசுவை கொல்ல சதி செய்தனர். ‘பஸ்கா பண்டிகைக்கு சீடர்களுடன் ஜெருசலேம் சென்ற இயேசு, அதனை முடித்த  பின், கெத்சமனே தோட்டத்துக்கு ஜெபம் செய்ய சென்றார். அப்போது இயேசுவை பிடிக்க, யூதமத குருக்கள், ஆசாரியர்களை அழைத்து  சென்ற அவரது சீடரான யூதாஸ் காரியோத் 30 வெள்ளிக்காசுக்காக ஆசைப்பட்டு, அவரை முத்தமிட்டு காட்டிக்கொடுத்தான்.

பிரதான ஆசாரியன் வீட்டில் இயேசுவை இரவு முழுவதும் அடித்து, துன்புறுத்தி மரணத்துக்கு ஏதுவான பொய் சாட்சியை தயாரித்தனர்.  மறுநாள் ரோம அரசர் ஏரோதுவிடம் விசாரணைக்கு அழைத்து சென்று குற்றப்படுத்தினர். ஆனால், அரசரோ இவர் மீது குற்றம் காணாமல்,  கவர்னர் பிலாத்துவிடம் அனுப்பி வைத்தார். பிலாத்துவும் இவர்மீது எந்த குற்றமும் காணவில்லை. இவரின் ரத்தப்பலி என்மீது சுமராது,  என கைகளை கழுவி, “இவரை இஷ்டப்படி செய்யுங்கள், என கூறி இயேசுவை அவர்களிடம் ஒப்படைத்தார். பின் யூத மதக்குருக்கள்  அதிகபட்ச தண்டனையாக சிலுவையில் அறைந்து கொல்ல முடிவு செய்தனர். இயேசுவை சாட்டையால் அடித்து, தலையில் முள்முடி  சூட்டி, அதிக பாரமுள்ள சிலுவை மரத்தை தூக்க செய்து, ‘கபாலஸ்தலம் எனப்படும் கொல்கொதா என்ற இடத்திற்கு ஊர்வலமாக  அழைத்து சென்று சிலுவை மரத்தில் ஏற்றினர்.

இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகள்:

1.கடவுளே, இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது, இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.
2.தனது வலது பக்கத்தில் இருந்த கள்ளனை பார்த்து, நீ இன்றைக்கும் என்னுடனே பரதீசிலிருப்பாய்.
3.தன் தாயை நோக்கி, இதோ உன் மகன் என்றும், சீசன் யோவானை நோக்கி, இதோ உன் தாய் என்றார்.
4.கடவுளே, கடவுளே ஏன் என்னை கைவிட்டீர்.
5.தாகமாயிருக்கிறேன்.
6. எல்லாம் முடிந்தது.
7.கடவுளே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.

நற்செயல்கள் புரிந்து, சிலுவை மரணத்தைச் சந்தித்து, மனிதகுலத்துக்காக, இயேசுநாதர் பாவமன்னிப்பை பெற்ற நாளே பெரிய வெள்ளி  தினமாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar