கடவுளைக் காண விரும்புபவனுக்குக் கடவுள் எங்கும், எல்லா இடங்களிலும், எல்லாவற்றிலும் தென்படுகிறார். நமக்கு ஆணவம் கொஞ்சம் குறைவாக இருந்தால் - நமக்குச் சுயநலம் கொஞ்சம் குறைவாக இருந்தால் - நமக்குத் தியாகம் கொஞ்சம் அதிகமாக இருந்தால் - நமக்கு மனத்தூய்மை கொஞ்சம் அதிகமாக இருந்தால் - இப்போது இருப்பதை விடவும் நாம் இன்னும் சற்று நன்றாக இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்வோம். கடலில் அலை, நுரை, சுழி என்று பல இருந்தாலும் இவற்றின் நாமரூபங்களை நீக்கி விட்டால் இருப்பது கடல் ஒன்றுதான். அது போலவே, உலகிலுள்ள நாமரூபங்களை நீக்கி விட்டால் இருப்பது இறைவன் மட்டுமே.