விருதுநகர்:விருதுநகர் மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை வழிபாடுகள், சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.இதையொட்டி விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில் பாதிரியார் ஞான பிரகாசம், துணை பாதிரியார் தாமஸ் எடிசன்,டோமினிக் தலைமையிலும், பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலயத்தில் பாதிரியார் ஆரோக்கிய செல்வம், எஸ்.பிரிட்டோ, செல்வராஜ், அந்தோணி ராஜ் தலைமையிலும், ஆர்.ஆர்.நகர் தூய வேளாண்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பாதிரியார் பெனடிக்ட் பர்ணபாஸ் தலைமையிலும் சிறப்பு வழிபாடுகள், திருப்பலி, மறையுரை நடந்தது. ஏராளாமா÷னார் பங்கேற்றனர்.