சாயல்குடி: சாயல்குடி அருகே டி.எம். கோட்டை அம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு அக்னி சட்டி, மாவிளக்கு எடுத்து பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றினர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்