Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்து வந்த ... ஏப்.22ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்: ஏப்.20ல் மதுரை நோக்கி பயணம் ஏப்.22ல் வைகையில் இறங்குகிறார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரியில் ஸ்ரீவாரி திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
புதுச்சேரியில் ஸ்ரீவாரி திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

28 மார்
2016
10:03

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில், ஸ்ரீவாரி திருக்கல்யாண உற்சவம்  நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட்,  திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணைந்து, புதுச்சேரியில் 4வது ஆண்டாக நேற்று மாலை, லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் திருக்கல்யாண  உற்சவத்தை நடத்தினர். இதற்காக, திருப்பதியிலிருந்து சுவாமி புறப்பட்டு, நேற்று முன்தினம் இரவு லாஸ்பேட்டை செல்லப்பெருமாள் பேட்டையில் உள்ள விவேகானந்தா பள்ளியில்   தங்க வைக்கப்பட்டார். அங்கு, திருப்பதியில் நடப்பது போன்று நேற்று காலை முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை ஆகியவை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து  சீனுவாச பெருமாளை   தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, லாஸ்பேட்டை ஹெலிபேட்  மைதானத்தில் நேற்று மாலை சுவாமி எழுந்தருள செய்யப்பட்டு, அங்கு,   ஸ்ரீவாரி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக புதுச்சேரி பஸ் நிலையத்திலிருந்து லாஸ்பேட்டைக்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.       இதனால்,  புதுச்சேரி மட்டுமின்றி, பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar