பதிவு செய்த நாள்
28
மார்
2016
12:03
பாகூர்: தேடுவார்நத்தம் செல்வ சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. தவளக்குப்பம் அடுத்த தேடுவார்நத்தம் கிராமத் தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த செல்வ சுந்தரவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி, கடந்த 26ம் தேதி கணபதி பூஜை, திருமகள், நிலத்தேவர் வழிபாடு நடந்தது. நேற்று காலை 6.00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மூல மூர்த்திகளுக்கு காப்பு அணிவித்தல் நடந்தது. இதனைத் தொடர்ந்து, காலை 7.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை யும், 8.00 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 8.45 மணிக்கு கோபுர கலசத் தில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, செல்வ சுந்தர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.