ப.வேலூர்: நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் தீ மிதி விழா நடந்தது. ப.வேலூர் அடுத்த, நன்செய் இடையாறில் உள்ள மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் காவிரியில் நீராடி கம்பத்துக்கும், மாரியம்மனுக்கும் பால், தீர்த்தங்கள் ஊற்றி, மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். கடந்த, 20ம் தேதி இரவு மறு காப்புக்கட்டுதலும், 27ஆம் தேதி வடிசோறு நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று நடந்த தீ மிதி விழாவில், 62 அடி நீள பூக்குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்தனர். பெண்கள் பூவாரி போட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று கிடா வெட்டுதலும், நாளை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.