காளையார்கோவில்: வால்மேல் நடந்த அம்மன் கோயில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை 9மணிக்கு காளீஸ்வர குருக்கள் தலைமையிலான குழுவினர் தலைமையில் கணபதிஹோமம், துர்க்கா, யாகபூஜை நடைபெற்றது. அம்மன் வெள்ளி அங்கி அணிந்து பக்தர்களுக்கு காட்சிஅளித்தார். சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்களும் செய்திருந்தனர்.