பதிவு செய்த நாள்
29
மார்
2016
12:03
பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏப்., 11ல் கொடியேற்றுடன் துவங்குகிறது. தொடர்ந்து பிரியாவிடையுடன் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் வீதிவலம் வரவுள்ளனர். தினமும் சிம்மாசனம், நந்திகேஸ்வரர், கிளி, குண்டோதரன், சிம்மம், கைலாச கற்பக விருஷம், அன்னம், ராவண கைலாசம், காமதேனு, ரிஷபம், குதிரை, யானை, பூப்பல்லக்கு ஆகிய வாகனங்களில் சுவாமிகள் புறப்பாடு நடக்கிறது. முக்கிய நிகழ்வாக ஏப்., 18 ல் அம்மன் தபசு, ஏப். 19 ல் காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் சுவாமிஅம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்.,20 காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்கின்றனர்.