தொண்டி: தொண்டி அருகே காரங்காடு புனித செங்கோல் மாதா சர்ச்சில் பாஸ்கு திருவிழா நடந்தது. நேற்று மாலை சிறப்பு திருப்பலியும், ஏசுவின் வரலாற்றை சிறப்பிக்கும் வகையில் பாஸ்கும் நடந்தது. விழாவை முன்னிட்டு சர்ச் மின்விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது. காரங்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.