பதிவு செய்த நாள்
30
மார்
2016
12:03
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அடுத்த, பெரியமணலி கரியகாளியம்மன், பெரியமாரியம்மன், நாகேசுவரசாமி, வேணுகோபால் சாமி, அங்காளம்மன் சாமி திருக்கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தேர்திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இன்று முதல் தேர்திருவிழா நடக்கவுள்ளது. காலையில், பொங்கல் வைத்தல் விழாவும், மாலை கரியகாளியம்மனுக்கு திருத்தேர் பவனி விழாவும் நடக்க உள்ளது. தொடர்ந்து, நாளை காலை மாரியம்மன் திருத்தேர் விழாவும், ஏப்ரல், 1ம் தேதி சிவன், பெருமாள் ஆகிய சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். அன்று இரவு, 10 மணிக்கு கரியகாளியம்மன் புஷ்ப அலங்காரத்தில் சிறப்பு நாதஸ்வர மேளக்கச்சேரியுடன் காட்சியளிக்கிறார்.