சேலம்: சேலம் ராஜகணபதி கோவிலில், நேற்று காணிக்கை உண்டியல் எண்ணப்பட்டது. அதில், ஒன்பது லட்சம் ரூபாய் இருந்தது. சேலம் முதல் அக்ரஹாரத்தில் உள்ள ராஜகணபதி கோவிலில், மூன்று நிரந்தர உண்டியல்கள், நேற்று எண்ணப்பட்டன. அதில், அம்மாபேட்டை ஜெய்ராம் கல்லூரி மாணவர்கள், 30 பேர் உண்டியல் பணத்தை எண்ணினர். அதில், 9 லட்சத்து 3,737 ரூபாய் இருந்தது. வெள்ளி, 383 கிராம், மூன்று அரை கிராம் தங்கம் இருந்தது. கோவில் கண்காணிப்பாளர் உமாதேவி உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.