பதிவு செய்த நாள்
31
மார்
2016
12:03
திருவள்ளூர் : திருவள்ளூர், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், இன்று, மூல மந்திர ஹோமமும், பஞ்சமுக சகஸ்நாம அர்ச்சனையும் நடைபெறுகிறது. திருவள்ளூர், தேவி மீனாட்சி நகர், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், பங்குனி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, இன்று, காலை 9:00 மணிக்கு, மூல மந்திர ஹோமம் நடைபெறுகிறது. காலை 11:00 மணிக்கு, ஹோமம் நிறைவடைந்ததும், தீபாராதனை நடைபெறும். இன்று, காலை 6:30 மணி முதல், இரவு 7:00 மணி வரை, பஞ்சமுக சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது.