பதிவு செய்த நாள்
01
ஏப்
2016
11:04
புதுச்சேரி: புதுச்சேரி வந்த 1500 கிலோ எடை கொண்ட, வாசவி பாததிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அவதரித்த ஆந்திரா மாநிலம் பெனுகொண்டாவில், கன்னிகா பரமேஸ்வரிக்கு பிரமண்ட கோவில் அமைக்கும் பணி நடக்கிறது. அங்கு, 102 அடிஉயர பஞ்சலோக சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த சிலையின், 1500 கிலோ எடை கொண்ட பாதம் மற்றும் வாசவி அம்பாளின் பஞ்சலோக விக்ரகம் கரிக்கோலமாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வாசவி பாதம், நேற்று புதுச் சேரிக்கு கொண்டு வரப்பட்டது. காமாட்சி அம்மன் கோவில் – காந்தி வீதி சந்திப்பில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வாசவி பாதம் வைக்கப்பட்டு, காலை 7:30 மணி முதல் வாசவி பாதத்திற்கு பக்தர்கள் பாலபிஷேகம், குங்குமத்தால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதைத் தொடர்ந்து, தம்பதி பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை புதுச்சேரி வாசவி கிளப் இன்டர்நேஷ்னல் தலைவர் சதீஷ், செயலாளர் சீனிவாசன், வாசவி கிளப் தலைவி உமா மற்றும் கமிட்டி உறுப்பினர் செய்திருந்தனர்.