பெண்ணாடம்: இறையூரில் செல்வ விநாயகர், திரவுபதி அம்மன் கோவிலில் பாலாலயம் நடந்தது. பெண்ணாடம் அடுத்த இறையூரில் செல்வ விநாயகர், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைப்பு பணிகள் கடந்தாண்டு துவங்கி நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து திரவுபதி அம்மன், விநாயகர் சுவாமிகளுக்கு பாலாலய விழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் அதிகாலை 4:30 மணியளவில் கணபதி பூஜை, பிரவேச பலி, 5:30 மணியளவில் கோ பூஜை, புன்னியாகவாஜனம், காலை 6:00 மணியளவில் கலச பூஜை நடந்தது. 6:30 மணியளவில் செல்வ விநாயகர், திரவுபதி அம்மன் சுவாமிகளுக்கு பாலாலய நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.