திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் சாலையில், திருவெள்ளறையில் உள்ளது ஸ்ரீ புண்டரீகாக்ஷப் பெருமாள் திருக்கோயில். இக்கோயிலில், உத்தராயண வாசல் மற்றும் தக்ஷிணாயன வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயன வாசல் வழியாகவும் பெருமாளை தரிசிக்க வேண்டும். சிபிச் சக்கரவர்த்திக்கு ஸ்வேத வராஹனாக பெருமாள் காட்சி தந்ததால் பெருமாளுக்கு ஸ்வேதபுரி நாதன் என்ற திருநாமம் ஏற்பட்டது. இதனாலேயே இந்தத் திருத்தலம் ஸ்வேதபுரி க்ஷேத்ரம் எனவும் அழைக்கப்படலாயிற்று. இக்கோயிலின் தென்மேற்கே உள்ள, ஸ்வஸ்திக் குளம் சக்கர குளத்தில் ஒரு துறையில் நீராடுபவர்களை மற்றொரு துறையில் உள்ளவர்கள் பார்க்க முடியாது என்பது சிறப்பம்சம்.