திருச்சி சமயபுரம் டோல்கேட்டுக்கு அருகில், கொள்ளிடக் கரையையொட்டி அமைந்துள்ளது துடையூர் ஸ்ரீவிஷமங்களேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவிஷ மங்களேஸ்வரர், ஸ்ரீலக்ஷ்மி நாராயணர், ஸ்ரீபிரம்மா ஸ்ரீசரஸ்வதி தேவி, ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீஉஷா, பிரத்யுஷா சமேத சூரிய பகவான் மற்றும் ஸ்ரீகாத்யாயினி சமேத ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் என ஒவ்வொரு சன்னிதியிலும் மொத்தம் 11 தீபங்களை ஏற்றி, 11 முறை பிராகார வலம் வர, தோஷங்கள் அகன்று கல்யாணத் தடைகள் விலகும் என்பது ஐதீகம்.