காரைக்கால்: திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து, 11 ஆண்டுகள் முடிந்ததை முன்னிட்டு, ஏப்., 1 சம்வத்ராபிஷேகம் நடந்தது.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவரகிரக தலங்களில் சனி பரிகார தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று, 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஏப்.,1 சம்வத்ராபிஷேக பூஜை நடைபெற்றது. தர்பாரண்யேஸ்வர் கோவில் மண்டபத்தில் புனிதநீர் கொண்டு, கும்பம் வைத்து சிறப்பு பூஜை மற்றும் யாகசாலை பூஜை நடைபெற்றது. தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வர பகவான், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.