பதிவு செய்த நாள்
02
ஏப்
2016
11:04
மயிலாப்பூர்: கபாலீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் ஏப்.,3 நடப்பதை முன்னிட்டு, மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், ஏப்.,3 காலை, 8:30 முதல் 9:50 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இந்த விழாவில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து, பாதுகாப்பு பணிகளை போலீசார் பலப்படுத்தி உள்ளனர். மகா கும்பாபிஷேகத்திற்கு தயாராக, கம்பீரமாக காட்சியளிக்கும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் ராஜகோபுரம். ; விக்ரகங்களுக்கு சாத்துவதற்காக, அஷ்டபந்தன மருந்து இடிக்கப்பட்டது. அதில் பக்தர்களும் பங்கேற்றனர்.
சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?
*1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்
*15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன
*நான்கு மாடவீதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள், 26 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன
*இரண்டு இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன
*10 நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன
*சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும், மயிலாப்பூருக்கு, 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
*மகா கும்பாபிஷேகம், தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு:
மகா கும்பாபிஷேகத்தை காணவரும் பக்தர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
*ராமகிருஷ்ணா மடம் சாலையிலிருந்து வரும் பக்தர்கள், தெற்கு மாட வீதி, சங்கீதா ஓட்டல் அருகே இறங்கி வர வேண்டும். வாகனங்களை, பி.எச்.எஸ்., உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நிறுத்தலாம்
*லஸ் கார்னலிருந்து வரும் பக்தர்கள், வடக்கு மாடவீதியில் இந்தியன் வங்கி அருகே இறங்கி வர வேண்டும். வாகனங்களை லஸ் சர்ச் சாலையில் உள்ள, மயிலாப்பூர் கிளப் அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான, வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திக் கொள்ளலாம்.
போக்குவரத்து மாற்றம்:
ஏப்.,3 காலை, 7:00 முதல் முற்பகல் 11:00 வரை,
*கச்சேரி சாலையில் இருந்து, மத்தள நாராயணன் தெரு
*சித்ரகுளம் கீழ் தெருவில் இருந்து, சித்ர குளம் வடக்கு தெரு
*நடுத் தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து கிழக்கு மாட தெரு
*ஆர்.கே.மடம் சாலையில் இருந்து தெற்கு மாட தெரு
*புனித மேரி சாலையில் இருந்து, ஆர்.கே.மடம் சாலையில் தெற்கு மாடவீதி நோக்கி
*டாக்டர் ரங்கா சாலையில் இருந்து, வெங்கடேச அக்ரஹாரம் சாலை
*லஸ் சந்திப்பில் இருந்து, ஆர்.கே.மடம் சாலையில் இருந்து கோவில் நோக்கி செல்ல வாகனங்கள் அனுமதி இல்லை
*ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக, அடையாறு செல்லும் வாகனங்கள், லஸ் சர்ச், டி சில்வா சாலை, தேவநாதன் தெரு, ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளியை அடையலாம்
*அடையாறில் இருந்து ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, விவேகானந்தர் கல்லுாரி, டாக்டர் ரங்கா சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக, லஸ் பகுதிக்கு செல்லலாம்
பேருந்து நிறுத்தம் எங்கே?
*மயிலாப்பூர் கோவில் குளம் அருகில் உள்ள மாநகர பேருந்து நிறுத்தம், லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் நிறுவனம் அருகில் மாற்றப்பட்டுள்ளது
*கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சன்னிதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாட வீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை மற்றும் வடக்கு மாட வீதி ஆகிய இடங்களில் எவ்வித வாகனங்களையும் நிறுத்த அனுமதி இல்லை
*ராயப்பேட்டை மற்றும் சாந்தோம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், லஸ் சர்ச் சாலை வடக்கு பகுதியில் இருந்து காமதேனு திருமண மண்டபம் திரைஅரங்கம் அருகிலும், கிளப் ஹவுஸ் மைதானத்திலும் நிறுத்தி கொள்ளலாம்
*தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், சிருங்கேரி மடம், ரங்கா சாலை வழியாக வந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் உள்ள, எம்.ஆர்.டி.எஸ்., மேம்பாலம் சாய்பாபா கோவில் அருகில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது
*அடையாறு பகுதியில் இருந்து வரும் வாகனங்களை வி.கே.அய்யர் வீதி, தேவநாதன் வீதி, புனித மாதா சாலை வழியாக ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள, பி.எச்.எஸ்., பள்ளி மைதான வளாகத்திலும் வாகனங்கள் நிறுத்தி கொள்ளலாம்.