பதிவு செய்த நாள்
02
ஏப்
2016
12:04
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழா, விக்னேஸ்வரர்
உற்சவத்துடன் துவங்கியது.
திருவள்ளூர் பஜார் தெருவில் அமைந்துள்ள தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழா, 11ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்.,1 காலை, 5:00 மணிக்கு கொடியேற்றுதல் விழா துவங்கியது. ஏப்.,1 காலை, 8:00 மணிக்கு சப்பரத்திலும், இரவு, 7:30 மணிக்கு சிம்ம வாகனத்திலும் புறப்பாடு நடைபெற்றது. இன்று காலை, அம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் வலம் வரும் தீர்த்தீஸ்வரர், 3ம் தேதி இரவு அதிகார நந்தி சேவையில் காட்சி அளிப்பார். வரும் 7ம் தேதி காலை ரத உற்சவமும், 8ம் தேதி இரவு, 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். 11ம் தேதி தொட்டி உற்சவம், பந்தம்பரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.