கடையநல்லூர் : காசிதர்மம் காசிலிங்க விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. கடையநல்லூர் அருகேயுள்ள காசிதர்மத்தில் திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான காசிலிங்க விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு திருவாடுதுறை ஆதீனகர்த்தர் சீர்வளர்சீர் குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச பண்டார சன்னதி முன்னிலையில் மகேஷ்வர பூஜையும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு நல்லாசி வழங்கப்பட்டது. வருஷாபிஷேக விழா ஏற்பாடுகளை தென்மண்டல மேலாளர் சங்கரசுப்பிரமணியன், காசிதர்மம் ஆய்வாளர் சக்கராசன், பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் செய்திருந்தனர். விழாவில் கோயில் மேற்பார்வையாளர் சண்முகநயினார், குற்றாலம் ஆய்வாளர் சக்கநாதன், வேலுச்சாமி மற்றும் அனைத்து ஆதீன உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.