சேலம்: சேலம் மாவட்ட பிராமணர் சங்கத்தின் சார்பில், துர்முகி ஆண்டு பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. துர்முகி ஆண்டு பஞ்சாங்கம் வெளியிடும் நிகழ்ச்சி, இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள வைஷ்னு சபாவில் நேற்று நடந்தது. பஞ்சாங்கத்தை தமிழ்நாடு பிராமணர் சங்க பொது செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்டார். மாநில தலைவர் ஸ்ரீராமன் பெற்றுக்கொண்டார். புதிதாக மாவட்ட தலைவராக பதவியேற்ற சாய்ராம்க்கு, உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.