சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ஆண்டு விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2016 11:04
கோவை: சித்தாபுதுார் ஐயப்பன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சித்தாபுதுார் ஐயப்பன் கோவிலின், 47ம் ஆண்டு விழா நேற்று துவங்கியது. வரும், 11ம் தேதி ஆறாட்டு திருவீதி உலாவுடன், விழா நிறைவடைகிறது. கொடியேற்று விழாவையொட்டி நேற்று காலை, கோவில் தந்திரிக்கு, கூரையும், பவித்திரமும் கோவில் சார்பில் வழங்கும் சடங்கு நடந்தது. மாலை ஆலய சுத்தியும், வழக்கமான கோவில் தந்திரிய பூஜைகளும் நடந்தன. மாலை உதயஸ்தமன பூஜையை தொடர்ந்து, பக்தர்கள் முன்னிலையில் கோவில் தந்திரி, மேள தாளங்கள் முழங்க, கொடிமரத்தில் கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் இளம்பரிதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கலாநிலையம் உதயன் நம்பூதிரி மற்றும் கல்லுார் உண்ணிகிருஷ்ணன் ஆகியோரின் முத்தாயம்பகை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.