பதிவு செய்த நாள்
05
ஏப்
2016
11:04
ஓசூர்: ஓசூர் அடுத்த ஒன்னல்வாடி வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஓசூர் அடுத்த ஒன்னல்வாடி கிராமத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் புனரமைக்கப்பட்டு, விநாயகர், பாலமுருகன், நவக்கிரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபி?ஷக விழா, கடந்த, 2ம் தேதி துவங்கியது. 3ம் தேதி காலை, கருட கம்பம் பூஜை, பிரதான கலச ஆராதனை, மகா கணபதி ஹோமம், மகா மங்களாரதி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை 5.30 மணிக்கு, சுப்ரபாதம், வேதபாராயணம், ஜீவபிரதீஷ்டபனை ஹோமம் நடந்தது. காலை, 10 மணிக்கு, கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சித்தேஸ்வர சுவாமி, வீரபத்திர சுவாமி பல்லக்கு உற்சவம் நடத்தப்பட்டது. அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து கோவில் கலசம் மீது பூக்கள் தூவக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பக்தர்கள் தங்களது தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கர்நாடக மாநிலம் ஆதிசுஞ்சனகிரி மடம் பீடாதிபதி நிர்மலானந்தநாதா சுவாமிகள், சிவாச்சார்ய சுவாமிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.