ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின், நேற்றைய உபயத்தில், அம்மன், கொடுங்களுர் பகவதி அம்மன் அலங்காரத்தில், கேடய வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவின் போது நடந்த, கேரள மாநில பாரம்பரிய நிகழ்ச்சியான வெளிச்சப்பாடு பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.