Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக ... செல்வ வினாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் செல்வ வினாயகர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏப். 22ல் கண்ணகி கோயில் விழா: கலெக்டர்கள் இன்று ஆலோசனை
எழுத்தின் அளவு:
ஏப். 22ல் கண்ணகி கோயில் விழா: கலெக்டர்கள் இன்று ஆலோசனை

பதிவு செய்த நாள்

05 ஏப்
2016
11:04

கூடலுார்: கண்ணகி கோயிலில் ஏப். 22ல் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடுவது குறித்து, தேனி- இடுக்கி கலெக்டர்கள் தலைமையிலான ஆலோசனைக்கூட்டம், இன்று தேக்கடியில் நடக்கிறது. தமிழக- கேரள எல்லையில் உள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இது அமைந்துள்ள பகுதி, யாருக்குச் சொந்தம் என இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று, இரு மாநில பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வழிபட்டு வருகின்றனர். கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதை கேரள வனப்பகுதி வழியாக இருப்பதால், தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி விதிமுறை வகுக்கப்பட்டு, அதன்படி விழா நடத்தப்படும்.

ஏப். 22ல் கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தேக்கடி ராஜிவ் காந்தி அறிவியல் மையத்தில், தேனி கலெக்டர் வெங்கடாசலம், இடுக்கி கலெக்டர் கவுசிகன் தலைமையில் நடக்கிறது. தமிழக கேரள அதிகாரிகள், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் கலந்து கொள்கின்றனர். சட்டசபை தேர்தல் காலம் என்பதால் இதில் கலந்து கொள்ள இரு மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய அரசு அதிகாரிகளுக்கும், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமே கலந்து கொள்ளமுடியும். அழைப்புள்ளவர்கள் வரமுடியாத பட்சத்தில் மாற்று அதிகாரிகள் கலெக்டரின் அனுமதி கடிதத்துடன் கலந்து கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: வசந்தராயன்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று மயானக்கொள்ளை உற்சவம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் தெருவில் மேல்மருவத்துர் ஆதிபராசக்தி சித்தர் கிளை கோவிலில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மாசி பிரம்மோத்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று காலை, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மகரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பள்ளி மாணவ – மாணவியர் அரசு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதற்காக, ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: மாகரல், மாகறலீஸ்வரர் கோவிலில் மாசிமக விழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar