பவழங்குடி சித்தர் கோவிலில் முதல்வர் ரங்கசாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2016 12:04
திருக்கனுார்: சோம்பட்டு பவழங்குடி சித்தர் கோவிலில் முதல்வர் ரங்கசாமி தரிசனம் செய்தார். புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், முதல்வர் ரங்கசாமி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று, திருக்கனுார் அடுத்த சோம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பவழங்குடி சித்தர் பீடத்திற்கு மதியம் 2:50 மணிக்கு முதல்வர் ரங்கசாமி வந்தார். சித்தர் பீடத்தின் கருவறையில் முதல்வர் ரங்கசாமி தரிசனம் செய்தார்.முதல்வருக்கு கோவில் பிரசாதம் வழங்கப் பட்டது. பிற்பகல் 3:10 மணிக்கு புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார். என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் பாலன் எம்.எல்.ஏ., துணை சபாநாயகர் செல்வம், சேர்மன் ஞானசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.கூட்டணி குறித்த கேள்விக்கு, மவுனமாக சித்தரை பார்த்தார். பின்னர், வேட்பாளர் அறிவிப்பு குறித்த கேள்விக்கு, பத்திரிகையாளர்களை அழைக்காமல் வேட்பாளர்களை அறிவிக்க மாட்டேன் என்றார்.