செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2016 12:04
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் உள்ள செம்பொற்சோதிநாதர் கோவிலில் சதய நட்சத்திர தினமான நேற்று, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. சிவபெருமானுக்கு உகந்த பன்னிரு சைவத்திருமுறைகளில் 8வது திருமுறையாக திருவாசகம் உள்ளது. மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின் 51 பதிகங்களையும், அதில் உள்ள 658 பாடல்களையும் செம்போதிநாதர் கோவில் ஓதுவார்கள் நேற்று காலை முதல் மதியம் வரை ஓதினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.