அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமான காலை 3.30 6 மணி வரை படிப்பதற்கு, புராணங்கள், யோகா, தியானம் முதலானவற்றிற்கு நல்ல நேரம். இதுபோல் மாலை 4.306 பிரதோஷ நேரமாகும். இந்நேரத்தில் தான் பாற்கடலைக் கடையும் போது, வாசுகி பாம்பு விஷத்தைக் கக்கியது. இதன் வீரியம் தாங்காமல், ஒரே நேரத்தில் அனைத்து தேவர்களும் சிவனை நாடி வழிபட்டனர். எனவே, இந்நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.