மங்கல வடிவமானவள், கருணை மயமானவள் என்று குறிப்பிடப்படும் துர்க்கை நமது இதயத்திலுள்ள ஆணவம், பேராசை போன்ற அசுரத்தன்மைகளை அகற்றி நமது உடல் உறுதியுடனும் வலிமையுடனும் விளங்கச் செய்கிறாள். வைணவி, விஜயை, முகந்தை, சண்டிகை, மாதவி, கிருஷ்ணை, நாராயணி, கன்னிகை, காளி, மாயை, ஈசானி, சாரதை, முதலிய பல திருநாமங்களைக் கொண்டிருக்கிறாள். துர்க்கையின் ஸ்துõல (சரீரம்) அறிகுறியாகவும், செய்யும் தொழில் அனைத்தையும் அவளாகவே கருதும் வகையிலும் நாம் நவராத்திரியின் கடைசி நாளில் ஆயுதங்களை வைத்து வழிபடுகிறோம்.