ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி விழா நாளை (ஏப்.7) நடக்கிறது. கடந்த மார்ச் 27ல் கொடியே ற்றத்துடன் துவங்கிய விழாவில் தினமும் அம்மன் மண்டகபடி எழுந்தருளல் மற்றும் இரவு வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் 12ம் நாளான நாளை பகல் 12.30 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மதுரை, தேனி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். ஏற்பாடுகளை தக்கார் ராமராஜா, செயல்அலுவலர் நாராயணி தலைமையில் அறநிலையத்துறை அலுவலர்கள் செய்துள்ளனர். டி.எஸ்,பி., வேணுகோபால், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏப்.8 அன்று காலை 10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.