பதிவு செய்த நாள்
06
ஏப்
2016
12:04
திருப்பூர் :கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா, இன்று துவங்குகிறது; பிரசித்தி பெற்ற மாட்டுச்சந்தை, வரும், 12 முதல், 21 வரை நடக்கிறது.காங்கயம்- திருச்சி ரோடு, ஓலப் பாளையத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, கண்ணபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழாவும், அதையொட்டி நடைபெறும் மாட்டுச்சந்தையும், பிரசித்தி பெற்றது.இத்திருவிழா, கிராம சாந்தி நிகழ்ச்சியுடன், இன்று துவங்குகிறது. 15 நாள் நடக்கும் இவ்விழாவில், 13ல் கம்பம் போடுதல்; 21ல் பொங்கல் விழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய அம்சமான மாட்டுச்சந்தை, வரும், 12 முதல், 21 வரை நடக்கிறது. இதில், காங்கயம் காளைகள், பல வகையான நாட்டு மாடுகள், குதிரை என, ஆயிரக்கணக்கான கால்நடைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறும். திருவிழா துவங்கும் நாளில் இருந்தே, மாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.