கொடுமுடி: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு, பாத யாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு ராஜகோபாலபுரத்தை சேர்ந்த பக்தர்கள், பழனி முருகன் கோவிலுக்கு தீர்த்தக்காவடி எடுத்து பாதயாத்திரை செல்வது வழக்கம். தற்போது, 32ம் ஆண்டு பாத யாத்திரையாக குருசாமி ஆறுமுகம் தலைமையில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். ஆற்றில் குளித்த பக்தர்கள் புனித காவிரி நீர் தீர்த்தக்குடம் எடுத்து, மகுடேஸ்வரரை வணங்கினர். பின்னர் வேடசந்தூர் சென்று தீர்த்தக்காவடி, பறவைக்காவடி, தேர்க்காவடியுடன் பழனிக்கு பாத யாத்திரையாக புறப்படுவர். பங்குனி உத்திரம் முடிந்தும், பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுக்க, கொடுமுடி கோவிலுக்கு அதிகளவில் வருகை தருவது குறிப்பிடதக்கது.