பதிவு செய்த நாள்
08
ஏப்
2016
12:04
சென்னை : மும்பையில், ஏழுமலையான் கோவில் கட்ட, நிலம் தேர்வு செய்யும் பணியில், தேவஸ்தானம் ஈடுபட்டு உள்ளது. மும்பையில், ஏழுமலையான் கோவில் கட்ட, திருமலை தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, மஹாராஷ்டிரா மாநிலம், நவி மும்பை, பேலாபூரில், 2.4 ஏக்கர் அரசு நிலத்தை, நேற்று முன்தினம், தேவஸ்தான அறங்காவல் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயல் அதிகாரி சாம்பசிவராவும் பார்வையிட்டனர். மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்து, கோவிலுக்கான இடத்தை இலவசமாக தர வேண்டும் என, கோரினர். விரைவில் அமைச்சரவையை கூட்டி, இதுகுறித்து, விவாதித்து முடிவு எடுக்கப்படும் என, அவர் கூறினார். பின், தேவஸ்தான அதிகாரிகள், மஹாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவையும் சந்தித்துப் பேசினர்.