புட்டப்பர்த்தி: புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா கோவிலில் தெலுங்கு வருட பிறப்பு யுகாதி திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் யுகாதி ஆண்டு திருவிழா இந்தாண்டு தர்முகி ஆண்டாக கொண்டாடப்படுகிறது. தெலுங்கு இன மக்கள் நாடு முழுவதும் இத்திருவிழாவை வெகுவிமரிசையாக கொண்டாடினர். புட்டப்பர்த்தி சாந்தி நிலையத்தில் யுகாதி விழாவில் திரளானவர்கள் பங்கேற்றனர். இன்று காலை முதல் பல்வேறு சமய நிகழ்வுகள் நடந்தன. வேத விற்பன்னர் ஸ்ரீ குப்பா சிவ சுப்ரமணிய அவதானி தலைமையில் வேத மந்திரங்களை பக்தர்கள் தொடர்ந்து பாடினர். பிறந்துள்ள இந்த புத்தாண்டில் உலகம் முழுவதும் நன்மைகள் நிகழும், இயற்கை நமக்கு வளத்தை அள்ளி தரும். இயற்கை பேரழிவுகளை நாம் எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கும். இந்த பூலோகத்தை சுக்கிரன் முன் நின்று நடத்தி நாட்டை வளமாக்கும். தீய சக்திகள் முறியடிக்கப்பட்டு நன்மைகள் மேலோங்கி நிற்கும் என நிகழ்வில் பண்டிதர் தெரிவித்தார்.